சென்னை: அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 20ஆம் தேதி 6ஆம் திருவிழாவாக திருக்கல்யாணமும், வெள்ளித்தேரோட்டமும் நடைபெறுகிறது. மறுநாள் 21ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக காவடிகளுடன் படையெடுத்து வருகின்றனர். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
↧