சென்னை: அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்பணம் அளிப்பது காலம் காலமாக கடைபிடிக்கும் மரபு. அதுவும் ஆடி, புரட்டாசி, தை அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி தர்பணம் கொடுத்து படையலிட்டு வழிபடுவது சிறப்பு. தை அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், காவிரி ஆறு பாயும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய புனித தலங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர். {photo-feature}
↧