சென்னை: ஜோதிடவியலில் தை மாதம் பத்தாவது மாதமாக கூறப்படுகிறது. சூரியன் மகரம் ராசியில் சஞ்சரிப்பது தை மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உத்திராடம் சிறந்த நட்சத்திரம். உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில் கொல்லையும் (வயலும்) என்பது பழமொழி.
↧