Quantcast
Channel: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology
Viewing all 270046 articles
Browse latest View live

எதிர்காலத்திற்கு சேமிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உலக சேமிப்பு தினம் பற்றிய ஜோதிட செய்திகள்!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இன்று உலக சேமிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924ல் இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் 'உலக சிக்கன தினம்" என ஒரு தினம் கொண்டாப்பட வேண்டும் எனவும், இத்தினத்தில் சேமிப்பு, சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு

சென்னைக்கு புயல்... வெள்ளம் பாதிப்பு வருமா- பஞ்சாங்கம் சொல்வதென்ன?

$
0
0
சென்னை: சென்னையை புயலும் வெள்ளமும் தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பீதி கிளப்பி வருகின்றனர். அப்படி எல்லாம் எதுவுமில்லை வதந்தி பரப்ப வேண்டாம் என்று வானிலை ஆய்வாளர்கள் ஆறுதல் செய்தி தெரிவிக்கின்றனர். கடந்த 2015 ஆம்ஆண்டு மழை பற்றியும், 2016ஆம் ஆண்டு வர்தா புயல் பற்றியும் பஞ்சாங்கத்தில் கணித்திருந்தது பலித்தது. இந்த ஆண்டு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில்

வாஸ்து தோஷம் நீங்கி சந்தோஷம் பெருகனுமா? பிருந்தாவன துவாதசியில் துளசி பூஜை செய்யுங்கள்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: நாளை பிருந்தாவன துவாதசி எனப்படும் துளசிமடதுவாதசி அனுஷ்டிக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் அம்சம் நிறைந்துள்ள துளசிச் செடி, விஷ்ணுவின் மனைவி. இவளுக்கு, பிருந்தா என மற்றொரு பெயரும் உண்டு. பிருந்தா, கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள். பிருந்தையாகிய துளசிதேவி, மகாவிஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத சுக்லபட்ச துவாதசி திதி. ஆகவேதான், அன்றைய தினத்துக்கு

குச்சிக்குச்சி ராக்கம்மாவும் குரு பார்த்தால் குண்டாவார்கள்...#Astrology

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். உடல் குண்டாவதற்கும் குருவே காரணம் என்கிறது ஜோதிடம் எப்படி என்கிறீர்களா படித்து தெரிந்து கொள்ளுங்கள். உலகம் முழுவதும் குழந்தை மற்றும் இளம்வயதினர் உடல் பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது. பிற்கால உடல் நலத்தையும் கல்வியையும் தரமான வாழ்க்கையையும் பாதிக்கும் இந்நிலையை எதிர்த்து சில நாடுகள்

ஐப்பசி அன்னாபிஷேகம் - சொர்க்கலோக வாழ்வு தரும் சிவ தரிசனம் - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

$
0
0
சென்னை: ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. இன்று மாலை ஐப்பசி மாத பெளர்ணமியில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு திருமயிலை கபாலீஸ்வரர், சுக்கிர ஸ்தலமான வெள்ளீஸ்வரர், சிதம்பரம் நடராஜர், திருவண்ணாமலை, காசி விசுவநாதர் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. {image-annabhishekam-03-1509711015.jpg

சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் கோலகலம்... பக்தர்கள் தரிசனம்

$
0
0
சென்னை: ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு இன்று சிவ ஆலயங்களில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே பரம்பொருள்

ஏழரை சனி... அச்சம் வேண்டாம் - பாதிப்பை குறைக்க பரிகாரம் இருக்கு!

$
0
0
சென்னை: ஜாதகரின் ஜன்ம ராசிக்கு பன்னிரெண்டாவது ராசி, ஜன்ம ராசி, ஜன்மராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது. கிரகங்களில் சனிக்கு மட்டும் சனைச்சரன் என்று பட்டம் அளித்ததிலிருந்து சனியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். சனி பிற கிரகங்களை விட

சென்னைக்கு தண்ணில கண்டம் இருக்கா? சிவகாமி கம்ப்யூட்டர் சொல்லும் ஜோதிடம்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் மழையால் சென்னை

திருநள்ளாறு... குச்சனூர்... திருநரையூர் - சனிபகாவான் பரிகார தலங்கள்

$
0
0
சென்னை: தமிழகத்திலும் காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறில் உள்ள சனி பகவான் பரிகார தலத்திற்கும் சென்று வணங்குவதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம். நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். சூரிய தேவனின் மகன் சனிபகவான். இன்னொரு மகன் எமதர்மன். இருவரும்

டெங்கு காய்ச்சலா? கவலை வேண்டாம்! வேப்பிலைக்காரி சமயபுரத்தாள் கைவிடமாட்டாள்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் டெங்கு காய்ச்சல் என்பது மிக மோசமான டெங்கு வைரசால் , கொசுவின் மூலமாக பரவக் கூடியது! இந்த காய்ச்சல் வந்தால் தோன்றும் முதல் அறிகுறிகள் , தலைவலி , கை , கால் மற்றும் உடம்பு வலி ,மற்றும் மிக கடுமையான காய்ச்சல்! இக்காய்ச்சல் வந்த சிலருக்கு , தோலில் ஆங்காங்கே, தட்டம்மை

நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கனுமா? உலக நோய் தடுப்பு தினத்தில் குரு பகவானை வணங்குங்கள்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: உலக நோய்த் தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இன்று பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக பல்வேறு நோய்களுக்கும் நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நோய் வந்த பிறகு சிகிச்சை செய்வதை விட வருமுன் காக்கும் விதமாக தேவையான

ரோட்டுல போகும்போது உங்களை நாய் துரத்துதா பாஸ்..?

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தர ராஜன் சென்னை: பைரவருக்கு உகந்த தினம் அஷ்டமி திதி. அதிலும் தேய்பிறை அஷ்டமி. மேலும், கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி மிகவும் சிறந்தது. இது, ‘மகாதேவாஷ்டமி' என்று, வட இந்தியப் பஞ்சாங்கப் படி மார்கசீர்ஷ மாதம் தேய்பிறை அஷ்டமியின்போது அனுசரிக்கப்படுகிறது. இந்தவருடத்தில் கார்த்திகை மாதத்தில் தேய்பிறை அஷ்டமி வராது. எனவே ஐப்பசி

அஷ்டம சனி தொல்லை நீங்க பைரவரை வணங்குங்க #காலபைரவாஷ்டமி

$
0
0
சென்னை: அட்டமத்து சனி நடக்கும் போது புத்தி வேலை செய்யாது, உணர்ச்சி மட்டும் வேலை செய்யும். இதனால் ஏற்படும் சிரமங்களை நீக்குகிறார் கால பைரவர். இன்று காலபைரவாஷ்டமி நாளில் காலபைரவரை வணங்கி அருள் பெறுவோம். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தற்போது அட்டமத்து சனி நடக்கிறது. ரிஷபத்திற்கு எட்டாவது வீட்டில் தனுசு ராசியில் சனி சஞ்சரிக்கிறார். அட்டமத்து

நிமோனியாவால் அவதியா? உங்கள் ஜாதகத்தில் புதனும் சனியும் சேர்ந்திருக்கிறதா என பாருங்கள்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிர மடைந்த நிலையில் குளிர்காலத்தில் ஏற்படும் நோயான நிமோனியா பரவும் சாத்திய கூறுகள் அதிகம். பச்சிளம் குழந்தைகளையே பெரும்பாலும் தாக்கும் ஒரு கொடிய நோய் நிமோனியா. இது சாதாரண காய்ச்சல் போலத் தெரிந்தாலும், இதன் தாக்கம் அதிகம். நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் ஆட்டிப்படைக்கும். நிமோனியா

இனிப்பு பிரியரா நீங்க? நீரிழிவு பற்றி குருவும் சுக்கிரனும் சொல்வதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாளை இந்த தினம்

மீன ராசி குட்டீஸா நீங்க.. அன்பான.. அழகான.. எதற்கும் அசராத செல்லங்களா இருப்பீங்களாம்!

$
0
0
சென்னை: மீன ராசியில் பிறந்த குழந்தைகள் ஒரளவு பிடிவாத குணம் கொண்டவர்கள். அன்பானவர் அனைவரையும் நேசிக்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். மீன ராசி கால புருஷ தத்துவத்தின் படி 12வது ராசி. இது ஒரு பெண் ராசி. உபய ராசி. இரட்டை ராசி. இதன் உருவம் இரண்டு மீன்கள். இரண்டு மீன்கள் எதிர் எதிர் திசையில் பிணைத்திருப்பது

கும்ப ராசி குட்டீஸ்களே... கருணையும் இரக்கம் கொண்ட அறிவாளிகள் நீங்கள்!

$
0
0
சென்னை: கும்பம் ராசியில் பிறந்த குழந்தைகள் சிறந்த புத்திசாலிகளாக இருப்பதோடு, கருணையும் இரக்கமும் கொண்டவர்கள். அறிவியல் துறையில் சாதிப்பார்கள். குடத்தின் அமைப்பைக் குறிப்பது கும்பம். நீருடன் உள்ள கும்பம்தான் இதன் அடையாளம். குடத்தை திறந்து பார்த்தால்தான் உள்ளே இருப்பது தெரியும். இந்த ராசியில் பிறந்த குழந்தைகள் தனக்குள் இருப்பதை வெளியே தெரியாமல் வைத்திருப்பார்கள். தூண்டுகோல் இருந்தால்தான் துலங்குவார்கள்.

சனி பெயர்ச்சி 2017: எந்த ராசிக்கு நன்மை? எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யணும்?

$
0
0
சென்னை: சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் குருஜி ராஜீவ் சிவம் கணித்துள்ளார். சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவான்

மகர ராசி குட்டீஸ்.. நீங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா.. வாங்க சொல்றோம் செல்லங்களா!

$
0
0
சென்னை: மகர ராசியில் பிறந்த குழந்தைகள் நல்ல புத்திசாலிகளாகவும் ஒழுக்கமுடையவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் சமுகத்தில் விளங்குவார்கள். மகரம் ராசி மண்டலத்தில் 10வது ராசியாகும். இது ஒரு பெண் ராசி. சர ராசி. பஞ்சபூத தத்துவங்களில் இது நில ராசியாகும், அதனால் இது பூமி ராசி என்றும் அழைக்கப்படும். இதன் அதிபதி சனி. இந்த ராசியை ஆங்கிலத்தில் கேப்ரிகான் என்று

ஐப்பசி துலாஸ்நானம் செய்யவில்லையா? வருத்தம் வேண்டாம்! முடவன் முழுக்கு இருக்கிறது!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: ஐப்பசி மாத கடைசி நாளன்று காவிரியில் மேற்கொள்ளப்படும் புனித நீராடல் "கடை முகம்/கடை முழுக்கு" என்றும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடல் "முடவன் முழுக்கு" என்றும் அழைக்கப்படுகிறது. அதன்படி இன்று ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகம் ஆகும். நாளை கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் கடைமுக புண்ணிய
Viewing all 270046 articles
Browse latest View live




Latest Images